#BREAKING: சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும்- சபாநாயகர் அறிவிப்பு..!
ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2022-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், காகிதம் இன்றி, அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மூலமே இருக்கும் என தெரிவித்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுமா..? என கேள்வி எழுப்பியதற்கு அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் நாங்கள் எதையுமே மறைத்து வைக்க மாட்டோம் என தெரிவித்தார்.