appavu [Imagesource : Deccanherald]
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்ட தொடரில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம்நடைபெற்றது. இன்று கூடிய கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பவு, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்ட தொடர் நடைபெறும். நாளை மறுநாள் வரை (அக்.11) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…