பிப்ரவரி 22-ம் தேதி வரை சட்டசபை கூட்டுத்தொடர்..!

Assembly

இந்த ஆண்டுக்கான  சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு பக்கங்களை மட்டுமே படித்து விட்டு ஆளுநர் தனது உரையை 2 நிமிடங்களில் முடித்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு கூட்டத்தொடர் உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இம்முறை அரசின் உரையை முழுமையாக புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின்  தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு  கூட்டம் நடைபெற்றது.

சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல – சபாநாயகர் அப்பாவு

அதில்” தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடர் வரும் 22-ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  பிப்ரவரி 13,14 (அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள்) ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும் எனவும், பிப்ரவரி 15-ம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எனவும் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 19ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கம் செய்கிறார். பின்னர் பிப்ரவரி 20ம் தேதி 2024 -25ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் 21ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனவும் 22-ம் தேதி பதிலுரை வழங்கப்படும்” என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்