இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது..!

tn assembly

2024ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. அரசியலைமைப்பு சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் என்பது அம்மாநில ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம் அந்தவகையில் ஆளுநர் ரவி பேரவையில் காலை 10 மணியளவில் உரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசிக்க உள்ளார்.

திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிகிறது: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

அதன்பின் அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்களுக்கு அவையை நடத்தலாம் என தீர்மானிக்க உள்ளது. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வரும் 19-ம் தேதி 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். மேலும், 20ம் தேதி முன் பண மானிய கோரிக்கையும், 21-ம் தேதி முன் பண செலவின கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்