பேரவை நேரலை ஒளிபரப்பு – சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!
சட்டமன்ற உரையை நேரலை செய்யும் வாய்ப்பை எதிர்க்கட்சித்தலைவருக்கு மட்டும் வழங்க முடியாது என சபாநாயகர் அப்பாவு விளக்கம்.
இன்று தமிழக சட்டப்பேரவையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்புவதை போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் தேவைப்பட்டால் இருப்போம்.
எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம். எதிர்க்கட்சியை அவதூறாக பேசுவது தவறு என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்திருந்தார்.
சபாநாயகர் விளக்கம்
அவர் கூறுகையில், பேரவையில் எந்த பாரபட்சமும் இல்லாமல் செயல்படுகிறோம்; நேரமில்லா நேரத்தில் குறிப்பிட்டவை மட்டுமே பேசுவோம் என அனைத்து கட்சிதலைவர்களும் முடிவு செய்து உறுதியளித்தால் மட்டுமே நேரலைக்கான பணிகள் தொடங்கும்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நேரலை செய்யவிருக்கிறோம்; சட்டமன்ற உரையை நேரலை செய்யும் வாய்ப்பை எதிர்க்கட்சித்தலைவருக்கு மட்டும் வழங்க முடியாது; முன்வரிசையில் கட்சித்தலைவர்கள் அமர்ந்துள்ளனர், பேசி முடிவெடுக்கப்படும். தற்போது அவசர முக்கியத்துவம் வாய்ந்தவற்றை மட்டுமே நேரலை செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.