சட்டமன்ற தேர்தல்: நேற்று வரை ரூ.11 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் – தேர்தல் அதிகாரி
தமிழகம் முழுவதும் நேற்று வரை ரூ.11 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது தமிழக தேர்தல் ஆணையம்.
அந்த வகையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகம் முழுவதும் நேற்று வரை ரூ.11 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.