சட்டமன்ற தேர்தல் – திமுக விருப்ப மனு கால அவகாசம் நீட்டிப்பு.!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் வரும் 24 வரை விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பித்திட வேண்டுமென்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது வரு 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை பொது தொகுதிக்கான கட்டணம் தொகை, ரூ.25,000 மற்றும் மகளிர், தனித்தொகுதிக்கு ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025