நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு இடையில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர்.எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில்,இந்த போராட்டம் உரிய அனுமதி பெறாமல் நடத்த உள்ளதால் ,சட்ட ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம்,நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மார்ச் 11-ஆம் தேதி வரை தடை விதிப்பதாக தெரிவித்தது.மேலும் மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…