சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிதத்தர்.
நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை இன்று மூன்றாவது நாளில் நிறைவு பெற்றுள்ளது. முதல் நாள் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்
அதன்பின்னர், நேற்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே இபிஎஸ் தரப்பினர், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மூன்றாவது நாளும் இபிஎஸ் தரப்பு கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதி பிரச்சனைகளை தெரிவித்தனர். அதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் அதற்கான நடவடிக்கை குறித்த விளக்கம் அளித்தனர்.
பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம், புகையிலைக்கு எதிரான மசோதா போன்றவை நிறைவேற்றப்பட்டன. இறுதியாக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெற உள்ள சாலை மேம்பாட்டு பணிகள் குறித்தும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம் குறித்தும் அறிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பிறகு தமிழக சட்டப்பேரவையினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…