தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு.! சபாநாயகர் அறிவிப்பு.!

Default Image

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிதத்தர். 

நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை இன்று மூன்றாவது நாளில் நிறைவு பெற்றுள்ளது. முதல் நாள் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்

அதன்பின்னர், நேற்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே இபிஎஸ் தரப்பினர், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று மூன்றாவது நாளும் இபிஎஸ் தரப்பு கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதி பிரச்சனைகளை தெரிவித்தனர். அதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் அதற்கான நடவடிக்கை குறித்த விளக்கம் அளித்தனர்.

பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம், புகையிலைக்கு எதிரான மசோதா போன்றவை நிறைவேற்றப்பட்டன. இறுதியாக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெற உள்ள சாலை மேம்பாட்டு பணிகள் குறித்தும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம் குறித்தும் அறிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பிறகு தமிழக சட்டப்பேரவையினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்