தமிழ்நாடு

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

Published by
லீனா

கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற 2-வது நாள் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் உறுப்பினர் இராசேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து,  வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ‘சமாதானம்’ எனும் புதிய திட்டத்திற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

இந்த புதிய திட்டம் குறித்து முதல்வர் பேசுகையில், ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். இதன் மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயனடைவார்கள்.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3-வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. சட்டப்பேரவையில் மயிலாடுதுறை மாவட்டத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சேர்த்துக் கொள்வதற்கான சட்ட முன்வடிவு மசோதாவை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த 3 நாட்களாக சட்டப்பேரவை கூட்டதொடர் நடைபெற்ற நிலையில், 3-வது நாளான இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Published by
லீனா

Recent Posts

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…

10 minutes ago

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…

26 minutes ago

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

37 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

16 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

17 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

17 hours ago