ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்.. 3 ஆண்டுகள் சிறை.! ஏடிஜிபி வனிதா விளக்கம்.!

Default Image

ஓடும் ரயிலில் யாரேனும் தாக்குதல் நடத்தினால் குற்றம் செய்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். – ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களிடம் விளக்கம்.

கடந்த வாரம் இணையத்தில் வைரலாக ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில்,  சென்னையில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஒரு தமிழ் பேசும் நபர் வடமாநில இளைஞரை தாக்கி ஆபாசமாக பேசும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சமபவத்தை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரத்தை சேர்ந்த மர்மநபர் : மேலும் அந்த வீடியோவில் இருக்கும் விவரங்களை குறிப்பிட்டு காவல்த்துறை புகைப்படம் வெளியிட்டு, அந்த நபரை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் விழுப்புரத்தை சேர்ந்த மகிமைதாஸ் என கண்டறிந்து விழுப்புரம் ரயில்வே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

3 ஆண்டுகள் சிறை : இந்த சமபவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் ஏ.டி.ஜி.பி வனிதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இது போல ஓடும் ரயிலில் யாரேனும் தாக்குதல் நடத்தினால் குற்றம் செய்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.  மேலும், ரயிலில் தாக்குதல் நடத்திய மகிமைதாஸ் எனும் நபர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றி வருபவர் எனவும் ஏடிஜிபி வனிதா குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்