மத்திய – மாநில அரசுகளே மாணவர்களை கொலை செய்திருக்கின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் உயிரைக் கூட சாக விடமாட்டோம் என்றார்கள் .கொரோனாவினால் 8 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள் லட்சம் பேருக்கு பாதிப்பு – அதிலும் பொய்க்கணக்கு. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா.? அரியலூர் அனிதா, பிரதீபா, மோனிஷா, ரிது ஸ்ரீ வைஷியா, கீர்த்தனா, சுபஸ்ரீ, விக்னேஷ் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் யார் இவர்கள் .? எப்படி இறந்தார்கள்.? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளது. இந்தக் கொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமியே முழுக் காரணம். நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று திமுக தானே குரல் எழுப்பியது. இரண்டு மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பினோமே என்னவாயிற்று அவை, உங்களால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை; சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுண்டா.?
இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறதா ? மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியைக் கூட பெற முடியாதவர்கள் அமர்ந்திருக்கறீர்கள். தலையாட்டி பொம்மையாக அடிமை ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…