தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை தொடக்கம்.!

Tamilnadu Arts and Science College admission

மாணவர் சேர்க்கை : தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
2024- 2025ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு (Post Graduate) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க
விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியில் இன்று (ஜூலை 27) முதல் பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 7ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் நேரடியாக சென்று விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் எங்குள்ளது என்பது குறித்த பட்டியல் மேற்குறிபிட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூபாய் 58 என்றும், பதிவுக் கட்டணம் ரூபாய் 2 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ருபாய் 2 மட்டும் வசூல் செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டண மற்றும் பதிவுக் கட்டணத்தை ஏடிஎம் , இணையவழி வங்கி சேவை , அல்லது UPI பரிவர்த்தனை வாயிலாக செலுத்தலாம். அல்லது கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” வங்கி வரைவோலை (DD) மூலமாகவும்  அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested