நிவாரணம் கேட்டு….மாணவர்களுடன் களத்துக்கு வந்த பேராசிரியர்….வியந்து பாராட்டிய பொதுமக்கள்…!!
கஜா புயல் நிவாரணம் கேட்டு மாணவர்களுடன் ஆசிரியரும் சேர்ந்து பொதுமக்களிடம் வசூல் செய்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
கஜா புயலினால் டெல்டா மாவட்டம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது.மின்சாரம் இல்லாமல் , உணவு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் டெல்டா பகுதி மக்களுக்கு பல்வேறு பகுதியில் இருந்து நிவாரண உதவியானது சென்றுகொண்டு இருக்கிறது. திரைத்துறையை சார்ந்தவர்கள் , அண்டை மாவட்டம் , அண்டை மாநிலம் , அரசியல் கட்சிகள் , மாணவர்கள் , அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் டெல்டா பகுதி மக்களுக்கு நிதிஉதவி , மற்றும் நிவாரணம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுகாவில் உள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட துறை சார்பில் இன்று கஜா புயல் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.நிவாரண பொருட்கள் , நிதி சேகரிப்புக்கு நாகலாபுரம் மனோ கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பேராசிரியர் எஸ்.சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார்.மனோ கல்லூரி முதல்வர் ஜெயசிங் நிவாரண நிதி வசூலை தொடங்கி வைத்தார்.விளாத்திக்குளம் கடை வீதி , பேருந்துநிலையம் , பொது மக்கள் கூடும் இடம் என வீடு வீடாக பல பகுதியில் ஆசிரியரும் , மாணவர்களும் சேர்ந்து நிவாரண நிதி வசூல் நடைபெற்றது.
அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை இந்த மாணவர்கள் செய்கிறார்கள்.குறிப்பாக மாணவர்களுடன் ஆசிரியரே நேரடியாக களத்துக்கு வந்து வசூல் செய்கின்றார் இவரை போல ஆசிரியர் இருக்க போய் தான் ”கல்லூரி மாணவர்கள் படிப்பையும் தாண்டி இந்த சமூகத்தை நேசிக்கிறார்கள்” என்று நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளரின் முயற்சியை பொதுமக்கள் வாழ்த்தி , பாராட்டி நிவாரண உதவி வழங்கினர்.இதே மாணவர்களுடன் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் எஸ்.சுரேஷ்பாண்டி கேரளாவுக்கும் இதே போல நிவாரணம் வசூல் செய்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.பாடம் எடுக்கும் நம்முடைய ஆசிரியரே நிவாரணம் கேட்டு களத்துக்கு வந்து விட்டார் என மாணவர்கள் உற்சாகம் அடைந்து கல்லூரி மாணவர்கள் பலர் நிவாரண நிதி சேகரிப்பில் கலந்து கொண்டனர்…
dinasuvadu.com