விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ,ஒரு ஓட்டுக்கு 5,00,000 கேளுங்கள் என்று பேசியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.கூட்டணி குறித்த அறிவிப்பும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நெருங்கும் நிலையில் சட்டமன்ற தேர்தல் குறித்து கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் துவங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி முதலில் மதுரை , தேனி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாளைய தலைமுறை இன்றைய தலைமுறைப்போல சீரழியக்கூடாது.இந்த கூட்டம் 5000 ரூபாய் கொடுத்தால் வாங்கி விடலாம் என்று கூறுகிறீர்கள் .5000 ரூபாய் என்பது யார் வீட்டு பணம் ? ,அப்போம் என் வீட்டு காசுதான ,அதைத்தான் வாங்குகிறேன் என்று நீங்கள் கூறினால் ,5000 ரூபாய் வாங்குவதற்கு ஏன் ? ஒத்துக்கொள்கிறீர்கள்.ஒரு ஓட்டுக்கு 5,00,000 கேளுங்கள்..கொடுக்க முடியுமா என்று பார்ப்போம்.ஆனால் நான் பணம் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…