ரூ.564 கோடி பட்ஜெட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா.!

Default Image
  • சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா.
  • அதற்கு ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பெரிய நவீன கால்நடை பூங்கா அமைப்பதற்காக ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவில், கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களுக்கான இனப்பெருக்கப் பண்ணை, மற்றும் நாட்டு நாய் இனங்களுக்கான இனப்பெருக்க பிரிவுகளை கொண்ட வளாகம் உள்ளிட்டவைகள் இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்கா அமைய நபார்டு வங்கி 447 கோடி ரூபாய் நிதியும், தமிழக அரசு சார்பில் 81 கோடி ரூபாயும் ஒதுக்கி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்