16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி…அமைச்சர் உதயநிதி அறிவிப்பு.!

Udhayanidhi Stalin Hockey Championship

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆடவர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023 ஐ நடத்துவோம் என்று அறிவிப்பதில் SDAT ( தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்)  உடன் இணைந்து தமிழ்நாடு அரசு பெருமிதம் கொள்கிறது.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சென்னையில் நடைபெறுகிறது. உலகின் முதல் பாரிஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நம்ம சென்னையில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆசியாவின் 6 முன்னணி நாடுகள் போட்டியிடுகின்றன.ஆசியாவின் மிகப் பெரிய ஹாக்கி களியாட்டத்திற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்