தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை..!!இரண்டு மாதத்துக்குள் தெளிவான முடிவு..!!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து இரண்டு மாதத்துக்குள் தெளிவான முடிவு எட்டப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாகத் தெரிவித்தார். எந்த இடத்தில் எய்ம்ஸ் அமைக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்த உடனே அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கும் எனக் குறிப்பிட்டார். நல்ல போக்குவரத்து வசதியுடன் கூடிய ஓரிடத்தைத் தமிழக அரசு தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் உடனடியாக அதைப் பரிசீலிப்போம் என்றும் அவர் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்குள் காசநோயும், 2030ஆம் ஆண்டுக்குள் மலேரியாவும் இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும், காசநோயால் பாதிக்கப்பட்டோருக்குச் சத்துணவுக்காக மாதம் ஐந்நூறு ரூபாய் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வாய்ப்பில்லை என்றும், மருத்துவக் கல்விக்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்