விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் எழுந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலிபுலியூர் எனும் ஊரில் செயல்ப்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் 150க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆசிரமம் செயல்ப்பட்டு வந்துள்ளளது. தற்போது இந்த ஆசிரமம் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆட்கொணர்வு மனு : அதாவது, 2021ஆம் ஆண்டு அமெரிக்க வாழ் இந்தியரான சலீம் என்பவர் தனது மாமனாரை இந்த ஆசிரமத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தனது மாமனாரை பார்க்க வந்துள்ளார். அப்போது, அந்த ஆசிரமத்தில் அவருடைய மாமனார் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை அளித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு ஷாக் : இந்த வழக்கை அடுத்து தான் அரசு அதிகாரிகள் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அதிகாரிகளுக்கே ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, இந்த அசிரமமே உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்துள்ளதாம். இங்கு சிகிச்சையில் இருந்த மனநலம் குன்றியவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்திரவதை செய்துள்ளாராம்.
ஆசிரமத்திற்கு சீல் : மேலும் அங்கு சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் அதிகாரிகள் ஆய்வில் பேரதிர்ச்சி செய்தியாக தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை கொண்டு தான் 13 பிரிவுகளின் கீழ் ஆசிரம நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆட்சியர் பழனி அவர்களின் உத்தரவின் பெயரில் தபோது ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்த 150க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
4 பேர் கைது : இதில் சிகிச்சையில் இருந்து முழுதாக குணமடைந்தவர்களை அவர்கள் அனுமதியோடு வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதற்ககட்டமாக் ஆசிரம ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரியா ஜூபின் கைது : ஆசிரம தலைமை நிர்வாகி ஜூபின் மற்றும் மரியா ஜூபின் உடல்நிலை காரணம் காட்டி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து இருந்தனர். இந்நிலையில், ஜூபின் மனைவி மரியா ஜூபின் உடல் நலம் சரியாக இருப்பதை தொடர்ந்து மரியா ஜூபினை காவல்துறையினர் மருத்துவமனையில் வைத்து கெடார் பகுதி காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…