தமிழக அரசால் ஒரு வருட சரிவில் இருந்து மீள போகும் அசோக் லேலண்ட் நிறுவனம்!

கடந்த ஒரு வருடமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி துறையில் பல நாட்களை வேலை இல்லா நாட்களாக அறிவித்து ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி வந்தனர். அந்த அளவிற்கு விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது.
மிகவும் பிரபலமான அசோக் லேலண்ட் நிறுவனமும் சரிவை சந்தித்தது. இந்நிறுவனமும் பல நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்திருந்தது. ஒரு வருடமாக சரிவில் இருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம், தற்போது தமிழக அரசால் மீண்டுவர உள்ளது. தமிழக அரசு தற்போது 1750 புதிய அரசு பேருந்துகளை தயாரிக்க உள்ளது. அந்த தயாரிப்புக்கான காண்ட்ராக்டை தற்போது தமிழக அரசு அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இதனால், தற்போது மீண்டும் புதிய உத்வேகத்துடன் அசோக் லேலண்ட் நிறுவனம் இயங்க உள்ளது. இதனால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025