#BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை, சென்னையிலிருந்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் வைத்து கைது செய்தனர், பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியகியுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் வாங்கிய வழக்கில் விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
4 முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை சென்னைக்கு அழைத்து வந்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.