இவர்கள் கூறுவது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை – அமைச்சர் உதயாகுமார்
டிடிவி தினகரனோ அல்லது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ சொல்வது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை.
அமைச்சர் உதயகுமார் அவர்கள், திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் வழிபாடு நடத்தினார். வழிபாட்டிற்கு பின் செய்தியாளர்க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வழிகாட்டுதலோடு கட்சியும், ஆட்சியையும் சிறப்பாக நடக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நிர்வாக திறன், கொரோனா தடுப்பு என எல்லாவற்றிலும் முதல்வர் எடப்பாடி பாலனிசாமி முதலிடத்தில் உள்ளதாகவும், டிடிவி தினகரனோ அல்லது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ சொல்வது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.