பேனாவுக்கு எப்படி சக்தி உள்ளதோ, அதே மாதிரி புகைப்படத்திற்கும் சக்தி உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது, கலைஞருடைய பேனா என முதல்வர் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், வள்ளுவர் கோட்டம், டைடல் பார்க் போன்றவற்றை உருவாக்கியதற்காக கையெழுத்திட்ட பேனா; குடிசைகளை மாற்றி அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்ட வேண்டும் என்று குடிசை மாற்று வாரியத்திற்காக கையெழுத்து போட்ட பேனா.
லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது, கலைஞருடைய பேனா. பேனாவுக்கு எப்படி சக்தி உள்ளதோ, அதே மாதிரி புகைப்படத்திற்கும் சக்தி உள்ளது; எந்த பேனா என்று உங்களுக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.