vikravandi [File image]
விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தலுக்கான 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்ட நிலையில், திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் காலையில் இருந்த திமுக வேட்பளரான அன்னியூர் சிவா அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுவந்தார்.
இதனையடுத்து, 19-வைத்து சுற்றின் எண்ணிக்கை முடிவடைந்து இருக்கும் நிலையில், திமுகவின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. 19-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா 1 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட வாக்குகள் 50,000-திற்கும் மேல் முன்னிலை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக அவரது வெற்றி தற்போது உறுதியாகி இருக்கிறது. அவரை தொடர்ந்து பாமக வேட்பாளரான சி.அன்புமணி தொடக்கம் முதலே பிணிநடைவை சந்தித்து தோல்வியடைந்திருக்கிறார். நாதக சார்பில் போட்டியிட்ட அபிநயா உட்பட 27 பேர் டெபாசிட் இழந்து உள்ளனர்.
முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி இருந்த நிலையில், தற்போது அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளதால் திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் உட்பட பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…