#Breaking:வடகிழக்கு பருவமழை நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

Default Image

சென்னை:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,முதல்வர் ஸ்டாலின் தற்போது அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வடகிழக்கு பருவமழையினால் சென்னையில் கடந்த 10 ஆம் தேதி இரவு முதல் தற்பொது வரை பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.இந்த மழைநீரானது மின்மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த நான்கு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார்.

இதற்கிடையில்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் எனவும்,இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கி.மீ. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,முதல்வர் ஸ்டாலின் தற்போது தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த கூட்டத்தில்,தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்க வைப்பது மற்றும் வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்