சென்னையில் மேம்பால பணிகள் நடைபெற உள்ளதால், தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் வாகனங்கள் செல்ல 9 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மாற்று பாதை வகுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் சாலை பணிகள், பாலம் மேம்பாட்டு பணிகள், மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் சாலை மாற்றம் என்பது சர்வசாதாரணமான ஒன்றாக மாறிவிடுகிறது. அதுபோல தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு உஸ்மான் சாலை : அதன்படி, சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பட உள்ளது. இதன் காரணமாக தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரையில் சுமார் 9 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது என போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
மாற்று பாதை : தெற்கு உஸ்மான் சாலை மூடப்படுவதால் அதற்கான மாற்று பாதைகளையும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன் படி, தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை ரோடு செல்லும் வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வாகனங்கள் தடை செய்யப்பட்டு. அதற்கு பதிலாக கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை பகுதியை அடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகள் : அதே போல, தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மேட்லி சந்திப்பு, பார்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகராயநகர் பேருந்து முனையம் : அரங்கநாதன் சுரங்கபாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும், மேற்கு சி.ஐ.டி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலை அடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய போக்குவரத்து மாறுதல்களுக்கு அனைத்து வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு தருமாறும் போக்குவரத்து காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…