பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்..! – தலைமை காஜி
இந்தியா முழுவதும் நேற்று பரவலாக பிறை தென்பட்ட நிலையில், நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பை நோம்பு கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று பிறை தென்பட்டதால் நாளை முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
நாளை முதல் ரமலான் நோன்பு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் கூறியுள்ளதாவது, ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22-03-2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24-03-2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.