தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ் நியமனம்!

Default Image

தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சிறுபான்மையினர் நல ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்துள்ள நிலையில்,  தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நல  ஆணைய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.பீட்டார் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, கடந்த 2010ஆம் ஆண்டு, மீண்டும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)-இன்படி சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திருத்தியமைத்து, அதன் தலைவராக திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள். திரு. எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கடந்த 1989 மற்றும் 1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்