தமிழகத்திற்கு புறப்பட்ட சசிகலா ! அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ,கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் சசிகலா இன்று பெங்களூரில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார்.தமிழகம் வரும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்ட நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.போலீசாரின் கட்டுப்பாடில் அதிமுக தலைமை அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளது.