பிரதமரின் தமிழக வருகை.! தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு நாளை மறுநாள் வரை தடை.!
முதுமலை யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வரவுள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில் அவர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, சென்னை பகுதிகளில் அவர் வருவதாக பட்டியலிடப்பட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நாளைபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல , நாளை முதுமல தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு நாளை மறுநாள் பிரதமர் மோடி வரவுள்ளதால், கக்கநல்லா – பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு இன்று மாலை முதலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் பிரதமர் வந்து செல்வது வரை, நாளை மறுநாள் வரையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.