விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி வரையில் தமிழக நிலவரம்….
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காலை 7 முதலே வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையில், 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் அஜித், தனுஷ் என பலரும் காலையிலேயே தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் வாக்களித்தனர்.