வாக்கு எண்ணிக்கையின் 2 மணி நிலவரப்படி,திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும்,அதிமுக 74 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில்,இன்று காலை 8 மணியிலிருந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் 2 மணி நிலவரப்படி,திமுக போட்டியிட்ட 173 தொகுதிகளில் 119 தொகுதிகள் முன்னிலையில் உள்ளன.மேலும்,திமுகவின் கூட்டனி கட்சிகளான காங்கிரஸ் 16 தொகுதிகளிலும்,விடுதலை சிறுத்தை,மதிமுக கட்சி 4 தொகுதிகளிலும்,சிபிஐ(எம்),இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் தலா 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.இதன்மூலம் திமுக கூட்டணி மொத்தம் 149 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.
இதைப்போன்று,அதிமுக போட்டியிட்ட 179 தொகுதிகளில்,74 தொகுதிகள் முன்னிலையில் உள்ளன.மேலும்,அதன் கூட்டனி கட்சிகளான பாமக 6 தொகுதிகளிலும்,பாஜக 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இதனைத்தொடர்ந்து,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.அதன்படி,மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட 142 மொத்த தொகுதிகளில் அதே 1 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
ஆனால்,நாம் தமிழர் மற்றும் அமமுக கட்சிகளானது இதுவரை ஒரு இடங்களில் கூட முன்னிலை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…