வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரம்;திமுக 142 தொகுதிகளில் முன்னிலை…!

Default Image

இன்று காலை தொடங்கிய தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரப்படி,திமுக 142 தொகுதிகளிலும்,அதிமுக 93 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில்,இன்று காலை 8 மணியிலிருந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரப்படி,திமுக போட்டியிட்ட 173 தொகுதிகளில் 111 தொகுதிகள் முன்னிலையில் உள்ளன.மேலும்,திமுகவின் கூட்டனி கட்சிகளான காங்கிரஸ் 13 தொகுதிகளிலும்,விடுதலை சிறுத்தை,மதிமுக கட்சி 4 தொகுதிகளிலும்,சிபிஐ(எம்),இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் தலா 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.இதன்மூலம் திமுகவானது மொத்தம் 142 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.

இதைப்போன்று,அதிமுக போட்டியிட்ட 179 தொகுதிகளில்,80 தொகுதிகள் முன்னிலையில் உள்ளன.மேலும்,அதன் கூட்டனி கட்சிகளான பாமக 6 தொகுதிகளிலும்,பாஜக 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

அதாவது அதிமுக வேட்பாளர்கள்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன், வேலுமணி, செங்கோட்டையன்,செல்லூர் ராஜூ,தங்கமணி ஆகியோர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.இதன்மூலம்,மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட 142 மொத்த தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

ஆனால்,நாம் தமிழர் மற்றும் அமமுக கட்சிகளானது இதுவரை ஒரு இடங்களில் கூட முன்னிலை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்