Katchatheevu : தேர்தல் நேரம் என்பதால் 50 வருடத்துக்கு முன் முடிந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது – இலங்கை முன்னாள் தூதர்.
அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்த தகவலை சேகரித்து அதனை பொதுவெளியில் தெரிவித்தார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இதனையே பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினர்.
இது குறித்து அண்மையில், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஆஸ்டின் பெர்னாண்டோ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில், இது தேர்தல் நேரம் என்பதால் பாஜக இதனை கையில் எடுத்துள்ளது என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், கள நிலவரப்படி பார்த்தால், தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அதனை சரிசெய்ய தற்போது கச்சத்தீவு பிரச்னையைகூறி வாக்குகளை கவர பார்க்கிறது. இந்த கச்சத்தீவு பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் போட்டு முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.
கச்சத்தீவு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர், கச்சத்தீவு பற்றிய விவாதங்களை தற்போது மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மத்திய அரசுடன் டெல்லியில் ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது என குறிப்பிட்டார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…