கச்சத்தீவை பாஜக கையில் எடுக்க இதுவே காரணம்.! இலங்கை முன்னாள் தூதர் கருத்து.!

Kachatheevu Island - K Annamalai

Katchatheevu : தேர்தல் நேரம் என்பதால் 50 வருடத்துக்கு முன் முடிந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது – இலங்கை முன்னாள் தூதர்.

அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்த தகவலை சேகரித்து அதனை பொதுவெளியில் தெரிவித்தார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இதனையே பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினர்.

இது குறித்து அண்மையில்,  இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஆஸ்டின் பெர்னாண்டோ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில், இது தேர்தல் நேரம் என்பதால் பாஜக இதனை கையில் எடுத்துள்ளது என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், கள நிலவரப்படி பார்த்தால், தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அதனை சரிசெய்ய தற்போது கச்சத்தீவு பிரச்னையைகூறி வாக்குகளை கவர பார்க்கிறது. இந்த கச்சத்தீவு பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் போட்டு முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர், கச்சத்தீவு பற்றிய விவாதங்களை தற்போது மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மத்திய அரசுடன் டெல்லியில் ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது என குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்