சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ, அதே போல தான் அரசியலும் -ஈபிஎஸ்
சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ அதே போல் அரசியலில் நுழைவதும் கடினம் என ஈபிஎஸ் பேச்சு.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்ற, எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் திரையரங்கிற்கு சென்று 25 வருடம் ஆகிறது. அரசியலில் அனைவருக்கும் முத்திரை பதிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடாது .ஆனால் அது எனக்கு கிடைத்துள்ளது. திரைப்படத்தில் எளிதாக ஜொலித்து விடலாம். ஆனால் அரசியலில் ஜொலிப்பது கடினமான ஒன்று.
அரசியல் என்பது முட்கள் நிறைந்த பாதை தான். திரைத்துறையில் நடிகர்கள் இயக்குனர்களின் உதவியால் வெற்றி பெறுவார்கள். முதலில் தெருவில் நின்று பின் ஒவ்வொரு படியாக ஏறித்தான் இந்த இடத்திற்கு வர முடியும். சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ அதே போல் அரசியலில் நுழைவதும் கடினம்.
திரைத்துறைக்கு, எங்கள் இயக்கத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ஏனென்றால் இரண்டு தலைவர்களுமே திரைத்துறையில் இருந்து வந்தவர்கள்.இது எந்த கட்சிக்குமே கிடைக்காது என தெரிவித்துள்ளார்.