எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி எம்பி பேட்டி!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, தேர்த பணிக்குழு அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், சமீபத்தில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. எழிலன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காந்தி போராட்டம் பலனளிக்கவில்லை.. தேச தந்தை நேதாஜி தான்.! ஆளுநர் ரவி பரபரப்பு.!
இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனிமொழி எம்பி, திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் போல இம்முறையும் முக்கிய பங்காற்றும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொது மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்க உள்ளோம். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக எந்தெந்த இடங்களுக்கு செல்கிறோம் என்பது பற்றிய பட்டியல் தயாரித்து விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க உள்ளோம்.
எனவே, அனைவரும் ஒன்று கூடி தேர்தல் அறிக்கையை தயாரிப்பதாக முடிவெடுத்துள்ளோம். மேலும், மக்களிடம் சென்று கருத்துக்கள் கேட்கப்பட்டு, அங்கு சேகரிக்கும் கோரிக்கைகள் குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் ஆலோசிக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
இதையடுத்து, திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை கதாநாயகியாக கூட இருக்கலாம் என செய்தியாளர் ஒருவர், திமுகவின் கதாநாயகனாக இந்த தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்று எழுப்பிய கேள்விக்கு அவ்வாறு பதிலளித்தார்.