தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.! 2 நாட்களுக்கு கனமழை.!
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாக உள்ளது எனவும் , அதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..!
முன்னதாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தீபாவளி அன்று மட்டும் மழை அளவு சற்று குறைந்து இருந்தது. வடகிழக்கு பருவமழையானது வரும் நாட்களிலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின்படி தமிழகத்தில், மதியம் 1 மணி வரையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் எனவும், கடலூர், மயிலாடுதுறை, நாகை , திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை தொடரும் என்றும்,
சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.