அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அழிக்கவோ, சலுகை அளிக்கவோ முடியாது.
கடந்த 2011 – 2015-இல் அதிமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் பெறுவதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்று கொண்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டனர்.
மேலும், சிறப்பு நீதிமன்றம் மற்ற இரண்டு வழக்குகளிலும் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருப்பதால், மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருப்பதாலும் அவரால் ஆஜராக முடியவில்லை என்று மற்றொரு தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அழிக்கவோ, சலுகை அளிக்கவோ முடியாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…