மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அருணாச்சலம் மீண்டும் கட்சியில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான சுற்றறிக்கையில், அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால் தான் முடியும் என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர். அவர் மீண்டும் நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் என துணை தலைவர் மெளரியா கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தினை வெற்றியடையச் செய்ய வேண்டுமெனும் உயரிய நோக்கத்துடன் உழைக்க வந்திருக்கும் அருணாச்சலம் அவர்களோடு கட்சி நிர்வாகிகளும், அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைத்து நமது கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவவேண்டும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…