அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம் என ராமநாதபுரம் போலீசார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் கள்ளர் தெருவை சார்ந்த அருண்பிரகாஷ் (23) அதே பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன்(20). இவர்கள் இரண்டு பேரும் திங்கட்கிழமை மாலை அவர்களது தெரு முனையில் நின்று கொண்டிருந்தார்கள் அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்குவந்த மர்ம கும்பல் , அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரனை தாக்கி உள்ளனர்.
அந்த கும்பலிடம் இருந்து இருவரும் தப்பிடித்து ஓடினர். ஆனால், அந்த கும்பல் அவர்களை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், சிகிக்சை பலனின்றி அருண்பிரகாஷ் உயிரிழந்தார். தற்போது யோகேஸ்வரனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை மதரீதியான முன்விரோதம் காரணமாக நடைபெற்றது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறிவந்த நிலையில், ராமநாதபுரம் போலீசார் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என தெரிவித்தனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…