நெல்லையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு .முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலும் பொருளாதார பிரச்சினை இருந்தது.
வெளிநாடுகளில் இருப்பது போன்ற நீர் மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும்.பல ஆண்டுகளாக இது பற்றி நான் பேசியும், எழுதியும் வருகிறேன்.நரசிம்மராவ் காலத்தில் இருந்தது போன்ற மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.தமிழகத்தில் தொகுதிகளை பிச்சை வாங்குவதை விட்டுவிட்டு பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்.
விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருகிறது .அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், நிர்மலா சீத்தாராமன், ஆகியோருக்கு பொருளாதாரம் தெரியாது.
நமது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பெரிய அளவில் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும்.ப.சிதம்பரத்தின் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.மேலும் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு…
நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…