ஆருத்ரா ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரில் இதுவரை நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உள்பட 45 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மாலதி, மைக்கேல்ராஜ், செந்தாமரை, சந்திர கண்ணன், ஹரீஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆருத்ரா வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் நடிகர் ஆர்கே.சுரேஷ் துபாயில் பதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வரும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் உள்ள நிலையில், அவரை அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…