நிதி நிறுவனம் மோசடி வழக்கில் அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். நேற்று முன்தினம், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், நிதி நிறுவனம் மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அலெக்ஸ் மட்டுமே ஆஜராகியுள்ளார்.
ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…