ஆருத்ரா நிதி நிறுவன மோசடி – பாஜக பிரமுகர் அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவவலகத்தில் ஆஜர்..!

Default Image

நிதி நிறுவனம் மோசடி வழக்கில்  அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

மேலும், இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். நேற்று முன்தினம், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நிதி நிறுவனம் மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,  அலெக்ஸ் மட்டுமே ஆஜராகியுள்ளார்.

ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்