ஆருத்ரா நிறுவன மோசடி.. ஆர்கே சுரேஷ்-க்கு லுக் அவுட் நோட்டீஸ்! இவர்களை கைது செய்ய உத்தரவு – ஐ.ஜி. விளக்கம்
ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிறுவனங்களின் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கம்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடிக்கு தங்கம், வெள்ளி பொருட்கள் மாற்றும் 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவன மேலாண் இயக்குநர் ராஜசேகர், மனைவி உஷாவை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஆர்.கே. சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் வெளிநாடு தப்பி சென்றவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் எனவும் கூறினார். மேலும், ஆருத்ரா, ஹிஜாவு, எல்பின், ஐஎப்எஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கமளித்தார்.