கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும்…! விசிக தலைவர் ட்வீட்…!
கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமையை நாளாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை அளித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியார் அண்ணா பாசறையில் வளர்ந்தவர். மைய மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர். கூட்டாட்சி கோட்பாட்டுக்கு உயிர்ப்பை அளித்தவர். தமிழக அரசே, கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமையை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை அளித்துள்ளார்.
#சூன்3_மாநில_உரிமைநாள்:
பெரியார்,அண்ணா பாசறையில் வளர்ந்தவர்.மைய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர். கூட்டாட்சி கோட்பாட்டுக்கு உயிர்ப்பை அளித்தவர்.
தமிழக அரசே, #கலைஞர்_பிறந்தநாளை_மாநில_உரிமை_நாளாக அறிக்கவும்.@mkstalin pic.twitter.com/vHmGpnwVtA
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 2, 2021