தமிழை மக்களிடம் கொண்டு சேர்த்து தமிழர் நினைவுகளுடன் கலந்தவர் கலைஞர் – கமல் ட்வீட்!
தமிழுடனும் தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் என கமலஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பலரும் இவரது வாழ்க்கை பாதைகளை பற்றி பேசி வருகின்றனர். அதுபோல அவருக்கு பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரையுலகின் நடிகருமாகிய கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தமிழையும் தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ் உடனும் தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2020