கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்.
முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலைஞரை புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் கலைஞர் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், 99 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் என்ற ஒருவர் பிறந்திருக்கவிட்டால், தமிழகத்தின் முகம் இப்படி பொலிவு பெற்றிருக்காது. சமுதாயம் இப்படி ஏற்றம் பெற்றிருக்காது. உயிரோடு இல்லாதவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடையாது. ஆனால் உயிரோடு இல்லாதவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம். எனவே, கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.